சொர்ண வாரி பட்டத்தில் அறுவடை செய்த நெல்லிற்கு அரசு கொள்முதல் நிலையம் திறக்கா விட்டால் மாபெரும் ஆர்ப்பாட்டம் ! சு.ரவி எம்.எல்.ஏ அறிக்கை!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சொர்ண வாரி பட்டத்தில் அறுவடை செய்த நெல்லிற்கு அரசு கொள்முதல் நிலையம் திறக்க விட்டால் மாபெரும் ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ அறிக்கை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சொர்ண வாரி பட்டத்தில் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் செய்ய 45 தற்காலிக அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது முழுமையாக அறுவடை முடிந்த நிலையிலும் நெல்லை கொள்முதல் செய்ய பதிவு செய்து விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கியிருந்த நிலையிலும் திடீரென கடந்த 26.08.2025 அன்று அனைத்துக் கொள்முதல் நிலையங்களும் மூடப்பட்டு மீண்டும் இதுவரை திறக்காததால் விவசாயிகள் சொர்ணவாரி பட்டத்தில் சாகுபடி செய்த நெல்லை விவசாயிகள் தாங்கள் வசிக்கும் வீடுகளில் சேமிக்க இடமில்லாத நிலையிலும் இங்கு அரசு தானியக்கிடங்கு வசதி இல்லாத நிலையிலும் வயல்வெளிகளிலும் சாலை ஓரங்களிலும், பாலங்களிலும், கொள்முதல் நிலையங்களிலும் நெல்மணிகளை கொட்டி வைத்துள்ளார்கள். தற்போது பருவம் தவறி மழை பெய்து வருவதால் பாதுகாப்பின்றி கிடக்கும் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது விவசாயிகள் மறு சாகுபடிக்கு செலவு செய்ய முடியாமல் கண்ணீரும் கம்பளமாய் தவித்து வருகிறார்கள். ஆகவே மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் குறைந்த பட்சம் 30 கொள்முதல் நிலையங்கள் உடனே திறந்து சொர்ண வாரி பட்டத்தில் முழுமையாக அறுவடை செய்து தற்போது தேங்கி கிடக்கும் நெல்மணிகளை கொள்முதல் செய்ய கோருகிறேன் . ஆனால், அண்டை மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் தங்கு தடையின்றி செயல்பட்டு வருவது போல் நம் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட வேண்டும் இல்லாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தவும் அதிமுக தயாராக உள்ளது இவ்வாறு அறிக்கையில் சு. ரவி எம். எல். ஏ குறிப்பிட்டுள்ளார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக