பள்ளி மாணவர்களின் நலன் கருதி தென்மாம்பாக்கம் கிராமத்தில் அமைய இருந்த டாஸ்மாக் கடை நீக்கம்!



ராணிப்பேட்டை மாவட்டம் சற்று முன் மாண்புமிகு முத்துசாமி அமைச்சர் பெருமகனார் என்னை தொலைபேசியில் அழைத்து தென்மாம்பாக்கம் கிராமத்தில் பள்ளிக்கு அருகாமையில் அமைய இருந்த டாஸ்மாக் கடையை மாணவர்கள் நலன் கருதி கடையை வைக்கக் கூடாது என உத்தரவிட்டு அதன் நகலை அனுப்பி உள்ளார்கள்! இந்த கடை இங்கே வரக்கூடாது என நம்மோடு போராடிய அனைத்து பொது மக்கள், அரசியல் இயக்கங்கள் மற்றும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை நம் பள்ளி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்! நம் பிள்ளைகள் எழுதிய கடிதங்கள் என்னை நெகிழ்ச்சி அடைய செய்ததாக அமைச்சர் பெருமகனார் தெரிவித்து உள்ளார்! அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி!

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!