!கரூரில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா!!
கரூர் மாவட்டம்,'புதுமைப்பெண்', 'நான்முதல்வன்' என எண்ணற்ற நலத்திட்டங்களை மாணவச் செல்வங்களுக்கு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், தமிழ்நாட்டில் இருந்து உலக தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கில் அயராது உழைக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின்அவர்களின் வழிகாட்டுதலில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு,
கரூர் மாவட்டத்திலிருந்து நல்லாசிரியர் விருது பெற்ற 7 ஆசிரியர்களுக்கும், கடந்த கல்வியாண்டில் கரூர் மாவட்ட அளவில் அரசு - அரசு உதவி பெரும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 100% பாட வாரியாக தேர்ச்சி வழங்கிய 1185 ஆசிரியர்களுக்கும், 129 தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கும், மாநில அளவில் மாணவர்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்த 82 உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், விழா ஏற்பாடு பணிகள் மேற்கொள்ளும் 40 ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் கேடயங்கள் வழங்கி,
மாவட்டம் மற்றும் பள்ளி அளவில் சிறப்பு நிலை தகுதி பெற்ற 619 மாணவர்களுக்கு தலா ரூபாய் 5000/- என மொத்தமாக 3095000/- வழங்கி, பின்னர் இந்த 2062 நல்நெஞ்சங்களுக்கும், அன்பு பரிசாக SMART WATCH வழங்கினார்.
கரூர் அட்லஸ் அரங்கில் நடைபெற்ற, இந்த நெகிழ்வான நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர். மீ. தங்கவேல் அவர்கள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக