இரட்டைக்கண் பாலம் ரயில்வே பணிகள் நடந்தாக வேண்டும் பயணிகள் சங்க செயற்குழுவில் வலியுறுத்தி பேச்சு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரின் மையப் பகுதியில் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் கீழே இரட்டை கண் பாலம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே பாலமானது சுவால்பேட்டை அரசு மருத்துவ மனை, காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் மார்கெட் பகுதிகளையும் பழனிப்பேட்டை, புதுப்பேட்டை, கிரிபில்ஸ்பேட்டை, கிருஷ்ணாம் பேட்டை ,ஆபீல்ஸ் பேட்டை உட்பட பல பத்துக்கு மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் பாலமாகும் ஆகவே மிகவும் முக்கியத்துவம் பெற்ற பாலம் இந் நிலையில் ரயில்வே க்கு சொந்தமான இடம் என்பதால் அங்கு இரண்டு கூடுதல் ரயில் பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு பணிகள் துவங்க முடிவு செய்தது இதனை சிலர்  எதிர்த்து வருகின்றனர் இந்த நிலையில் ரயில் பயணிகள் சங்கம் அவசர செயற்குழு கூட்டத்தை  சங்கத்தின் தலைவர் நைனா மாசிலாமணி   தலைமை ஏற்று பேசினார். பொதுச் செயலாளர் அருள் பேட்டரி குணசீலன் முன்னிலை வகித்து பேசினார். கூட்டத்தில் சட்ட ஆலோசகர். பிரபாகரன், சிவசுப்பிரமணியம், சரஸ்வதி, ராஜேந்திரன், ரகுநாதன், ஜெயராஜ், மோசூர். ராஜேஷ், நவநீதம்ராஜன், வெங்கட நரசிம்மன், செந்தில்குமார், நவாஸ் கான், அருள்ராஜ் வக்கில். நந்தகுமார் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் செய்தியாளர்களை சங்க தலைவர். நைனா மாசிலாமணி சந்தித்து கூறியதாவது ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் அவசியம் கருதி இரண்டு இருப்பு பாதை அமைக்கக் சங்கத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.  இது பயணிகளுக்கு கிடைக்க கூடிய நல்ல வாய்ப்பு இதனால் நேரங்கள் குறைகிறது கூடுதல் ரயில் சேவை கிடைக்ககூடியது  ஆகவே ரயில்வே முடிவை  ஏற்றுக்கொள்ள வேண்டும் இந்த சூழ்நிலையில் சட்டமன்ற உறுப்பினரின் செயல் மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தின் வாயலாக கேட்டுக் கொள்கிறோம் என கூறினார்.இறுதியில் பொருளாளர். ஏகாம்பரம் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!