விழுப்புரம்:போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தமின்மாற்றியை மாற்றி அமைத்த காவல்ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ்!!

விழுப்புரம்மாவட்டம்,விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விழுப்புரம் ரயில் நிலையம் அருகில்  புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் இருந்த மின்மாற்றி பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர். 

ப.சரவணன் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர்.ஷேக். அப்துல் ரகுமான் இ.ஆ.ப அவர்களின் உத்தரவின் பேரில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.லட்சுமணன் அவர்களின் உதவியுடன் விழுப்புரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர். 

ரவீந்திர குமார் குப்தா இ.கா.ப அவர்கள் தலைமையில் விழுப்புரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர். (பொறுப்பு) வசந்த், காவல் உதவி ஆய்வாளர்கள். விஜயரங்கம், குமாரராஜா, தலைமை காவலர்கள்.வசந்தி, நித்திய குமார், மற்றும் முத்துக்குமரன் ஆகியோர்கள் மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக சாலையின் இடதுபுற ஓரத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

சாலை விபத்தினை தடுக்கும் பொருட்டும், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டும், நடவடிக்கை எடுத்த காவல் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!