வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் !!

மாமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலன் கருதி அடிப்படை வசதி வேண்டி, சராமாறியாக கேள்வி எழுப்பியதால், மேயர், துணை மேயர் மற்றும் கமிஷனர் திணறிய அவலநிலை!!

செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களுக்கு,போட்டோ வீடியோ எடுக்க, நோட்டீஸ் ஒட்டி தடை, தடை நோட்டீசால் ஜனநாயகத்தின் நான்காம் தூண்கள் ஆவேசம்...

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலூர் இன்ஃபான்ட்ரி சாலை, வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில், வேலூர் மாநகராட்சி, மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் எம்.சுனில்குமார் ஆகியோர் தலைமையிலும், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலையிலும் இந்த மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல குழு தலைவர்கள், மண்டலம் 1, புஷ்பலதா வன்னியராஜா, மண்டலம் 2, வீனஸ் ஆர். நரேந்திரன், மண்டலம் 3, யூசுப்கான், மண்டலம் 4, வெங்கடேசன் மற்றும் 60 வார்டு மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலக பொறியாளர்கள், வேலூர் மாநகராட்சி அனைத்து பிரிவு அலுவலர்கள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த மாமன்ற கூட்டத்தில் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும், மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, தெரு சாலைகள் வசதி, தெரு விளக்குகள் வசதி, குப்பைகளை அகற்றாமல் ஆங்காங்கே துர்நாற்றம் வீசும் அவல நிலை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் கிடப்பில் உள்ளதாகவும், குறித்த நேரத்தை விட தாமதமாகவும், பணிகளே நடைபெறாமல் இருப்பதும், முழுமையாக மாநகர பொதுமக்களின் நிலைமையை கருத்தில் கொள்ளாமல், அலட்சியம் காட்டுவதும், மாநகராட்சி நிர்வாகம் அரசின் திட்டங்கள் மீது அதிருப்தியில் உள்ளதாகவும், எந்த ஒரு பணிகளையும் மேற்கொள்வதில்லை எனவும், மாமன்ற உறுப்பினர்கள் மேயர் மற்றும் கமிஷனரிடம் அடிப்படை வசதிகளுக்காக கடமையை செய்ய தவறும் அதிகாரிகள் மீதும் சரமாரியாக கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட மேயர் போட்டோ வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கே பாருங்கள் போட்டோ வீடியோ எடுக்க தடை என நோட்டீஸ் ஓட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேலூர் செய்தியாளர் முபாரக் அலி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!