வாலாஜா அருகே நரசிங்கபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாம்!!


ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுக்கா, நரசிங்கபுரம் பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வட்ட சட்டப் பணிகள் குழு பேரிடரில் பாதிக்க பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் நரசிங்கபுரம் பஞ்சாயத்து உறுப்பினர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். இதில் தலைமை மற்றும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விழிப்புணர்வு சிறப்புரை ஆற்றியவர் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி முனுசாமி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும் இதில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் டாக்டர். சுரேந்திரன், நரசிங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் வழக்கறிஞர். மனோகரன், வழக்கறிஞர் மாதவன் , நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷீலா வட்ட சட்ட பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர். சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நரசிங்கபுரம் பள்ளி சிறுவர், சிறுமியர் சிறப்பாக உரையாற்றியதற்காக வழக்கறிஞர் சங்கத் தலைவர் டாக்டர். சுரேந்திரன் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் தலைமை ஆசிரியர். சீலா நன்றி கூறினார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!