நம்ம கடலூரில் மீன் அருங்காட்சியகம் புனரமைப்பு பணி தீவிரம்!!

கடலூர் மாநகராட்சி மஞ்சக்குப்பம் சுப்புராயலு பூங்கா அருகில் 2008ம் ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கடல் உயிரியல் மேம்பாட்டு ஆய்வு மையத்துடன் இணைந்து ரூ.27.70 லட்சம் மதிப்பில் மீன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இந்த மீன் அருங்காட்சியகம் மாநகராட்சி மூலம் ஒரு வருட காலமாக பராமரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந் தது. இதையடுத்து புயல் தாக்கத்தின் காரணத்தாலும், தொடர் பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தினால், இந்த மீன் அருங்காட்சியகம் பயன்பாடின்றி பொதுமக்கள் பார்வையிடாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடி ஆய்வு மேற் கொண்டார். உடனடியாக  ரூ.4.63 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் மீன் அருங்காட்சியகம் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பொழுதுபோக்கு அம்சங்களில் நீர்நிலைப் பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் பூங்காக்கள் அமைந்துள்ளது. மேலும் அறிவியல் ரீதியாகவும் பிரம்மாண்டமான வகையில் மீன் அருங்காட்சியகம் இடம்பிடித்துள்ளது. புதிய நவீன முறையில் இந்த அருங்காட்சியக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!