மாணவர்களுக்கு சென்னையை சேர்ந்த நம்ம பேமிலி குரூப் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!!
பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நம்ம ஃபேமிலி குரூப்ஸ் நிறுவனர் மற்றும் சேர்மன் பொன்னுசாமி கார்த்திக் அவர்களின் பங்களிப்பில் கல்வி உதாரணங்கள் வழங்கப்பட்டது. நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர்.ஜி.ஆனந்த் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர். சு. திருமாவளவன் அவர்கள் தலைமை தாங்கினார் ,பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர். ஏ.வீ. லோகநாதன்,
முதுகலை ஆசிரியர்கள். பாரதி,லட்சுமி காந்தன்,ஆசிரியர் செயலர். C.ரத்தின பிரகாஷ்,உடற்கல்யாசிரியர். செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நகர மன்ற உறுப்பினர்.கே . பி .கே . ராமலிங்கம் அவர்களும்,பள்ளி வளர்ச்சி குழு துணைத் தலைவர். E.பழனி அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.நிகழ்ச்சி நிறைவாக பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர். ராஜா ஆ நன்றி கூறினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக