கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி முன்னேற்பாட்டு கூட்டம் !!


 

தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி காண முன்னேற்பாட்டு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் நடந்தது 

இக்கூட்டத்தின் போது ஆட்சியர் ரஞ்சித் சிங் பேசுகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் நான் முதல்வன் புதுமைப்பெண் தமிழ் புதல்வன் காலை உணவு திட்டம் மற்றும் விளையாட்டு துறையில் செயல்படுத்தப்படும் சீரிய திட்டங்கள் மூலம் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் அதிக அளவில் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர் மேலும் முதல் தலைமுறை  பட்டதாரிகளும் பெண் கல்வியும் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது

எனவே அரசின் திட்டங்கள் மூலம் சாதனை படைத்த மாணவியர்களை கௌரவிக்கும் வகையிலும் திட்டங்கள் குறித்து மாணவர்களிடம் மாணவர்களிடம் விழிப்புணர்வு மற்றும்வழிகாட்டுதல்களை ஏற்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகிற 25ஆம் தேதி மாலை 4 மணிக்கு கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளிலும்இந்நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்ப செய்யப்படவுள்ளது

எனவே தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இந்நிகழ்ச்சி இணைய நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் மேலும் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் மேலும் தேனி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு முடித்து இதுவரை உயர் கல்வியில் சேராத மாணவர்கள் உயர்கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான தேவையான சான்றிதழ்களை உடனடியாக வழங்க கோரி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவே கல்லூரி சேர்க்கையின் போது மாணவர்களின் சான்றிதழ்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் கால அவகாசம் கொடுத்து உயர்கல்வி சேர்க்கையினை உறுதி செய்ய வேண்டும் மேலும் வருகிற 24-ஆம் தேதி பசுமை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது அனைத்து கல்லூரிகளிலும் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் திரு ரஞ்சித் சிங் தெரிவித்தார் இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சிய சண்முகசுந்தரம் கலால் உதவி ஆணையர் முத்து செல்வி மற்றும் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!