சந்திர கிரகணம்:திருவதிகை பெரியகோவில் நடை சாத்தப்பட்டது!!

இந்தியாவில் இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இரவு 8.58 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். டெலஸ்கோப் மற்றும் அல்லது பைனாகுலர்கள் ஆகியவற்றாலும் பார்த்து ரசிக்கலாம்.

பகுதி கிரகணம் இன்று இரவு 9.57மணிக்கு ஆரம்பிக்கும்.முழு கிரகணம் இரவு11.01 மணிக்கு தொடங்கும் என்று வானியல் நிபு ணர்கள் தெரிவித்து உள்ளனர். இன்று கிரகணத்தின் போது இரவு 11.01 மணி முதல் நள்ளிரவு 12.33 வரை மொத்தம் 82 நிமிடங்கள், அதாவது 1.22 மணி நேரம் நிலா முழுமையாக மறைக்கப்படும்.

பகுதி கிரகணம் இரவு 1.26 மணிக்கு முடிவடையும். சந்திரகிரகணம் இரவு 2.25மணிக்கு நிறைவடையும்.இன்று சந்திர கிரகணத்தின் போது நிலா ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படும்.சந்திர கிரகணத்தை ஒட்டி திருவதிகை பெரிய கோவில் நடை மாலை 7 மணியளவில் சாத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!