வளர்புரத்தில் நடைபெற்ற மூன்றாம் கட்டம்உங்களுடன் ஸ்டாலின் முகாம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒன்றியம், வளர்புரம் அரசு பள்ளியில் கீழாந்தூர், வளர்புரம் கிராம மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அரக்கோணம் மத்திய திமுக ஒன்றிய செயலாளர். பசுபதி தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு உறுப்பினர் நாராயணசாமி திமுக ஒன்றிய துணைச் செயலாளர் டில்லி பாபு முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் ஒன்றிய குழு குழு தலைவர் நிர்மலா சௌந்தர் கலந்து கொண்டு முகாம் பணிகளை ஆய்வு செய்தார் பின்னர் மருத்துவத்துறையின் மூலம் மருந்து பெட்டகங்களை வழங்கினார் தூய்மை பணியாளர்களுக்கு காப்பீடு அட்டைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஆயிரம் ரூபாய் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். அப்பொழுது அரசு அதிகாரிகள் திமுக கட்சி ஒன்றிய நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் ஒன்றிய செயலாளர். பசுபதி துணைச் செயலாளர். டெல்லி பாபு ஆகியோரால் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக