மேல்களத்தூர் சாலை சீரமைக்காவிட்டால் நெமிலி பிடிஓ அலுவலகம் முன்பு போராட்டம் திட்ட இயக்குனருக்கு எம்எல்ஏ கடிதம்!



ராணிப்பேட்டை மாவட்டம் மேல்களத்தூர் காலனி சாலை விரைவில் சீரமைக்காவிட்டால் நெமிலி பிடிஒ அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும் என மாவட்டதிட்ட  இயக்குனருக்கு அரக்கோணம் எம் எல் ஏ சு.ரவி கடிதம் அனுப்பி உள்ளார் அந்த கடிதத்தில் எம் எல் ஏ சு.ரவி கூறியதாவது ராணிப்பேட்டை மாவட்ட திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை அவர்களுக்கு வணக்கம் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி மேல் களத்தூர் ஊராட்சி மேல் களத்தூர் காலனி டு பாலாபுரம் காலனி செல்லும் 700 மீட்டர் தார் சாலை குண்டும்  குழியுமாக மக்கள் செல்ல பயனற்றதாக உள்ளது இந்த சாலை முழுக்க முழுக்க ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்துகிற சாலை இச்சாலையை சீரமைக்க பலமுறை கடிதம் கொடுத்தும் 

சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நேரடியாகவும் கைபேசி மூலமும் தெரிவித்தும் இதுவரை அச்சாலையை சீரமைக்க வில்லை இதுவரை ஊராட்சி பொறியாளரும் சாலையை பார்வையிடவில்லை எனவே மதிப்பிற்குரிய திட்ட இயக்குனர் தாங்கள் நேரடியாக இச்சாலையை பார்வையிட்டு இன்றிலிருந்து இரண்டு மாதத்திற்குள் உடனடியாக சீரமைத்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இல்லையென்றால் மக்களை திரட்டி நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்பதை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!