நல்லாசிரியர் விருது பெற்ற சா. அருணன்!!

கடலூர் மாவட்டம்,நல்லாசிரியர் விருது பெற்ற சா.அருணன் அவர்களைப் பற்றிய ஒரு பார்வை! சா. அருணன் அவர்கள் ஓவிய ஆசிரியராக திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 17.11.2004ம் முற்பகளில் ஐந்து வருட ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில்  பணியில் சேர்ந்து பின்பு 2006ம் ஆண்டு அரசு ஊழியர் ஆசிரியர்களின. காவலர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா ஆட்சிக்கு வந்தவுடன் ஐந்து வருட ஒப்பந்தத்தை ரத்து செய்து 01.06.2006ல் இருந்து சுமார் 55 ஆயிரம் அனைத்து வகை ஆசிரியர்களையும் ஒரே கை எழுத்தில் காலமுறை ஊதியத்தில்  கொண்டுவந்து பணி நிரந்தரம் செய்து விளக்கேற்ளினார் 55 ஆயிரம் ஆசிரியர்களில. சா. அருணன் அவர்களும்  ஒருவர் மேலும் தற்போது வரை இப்பள்ளியிலேயே பணியாற்றி வருகிறார் , நாட்டு நலப்பணி உதவி திட்ட அலுவலராகவும்  மேலும் 2015ம் ஆண்டு தேசிய மாணவர் படை அலுவலர் பயிற்சி பெற்று தேசிய மாணவர் படை அலுவலராகவும் சிறப்பாக  பணியாற்றி வந்தார் .தற்சமயம் குடும்ப சூழ்நிலை காரணமாக தேசிய மாணவர்படை அலுவர் பணியில் இருந்து விடுவிக்க கேட்டுக் கொண்டுள்ளார், மாணவர் சேர்க்கையை மட்டும் நிறுத்தி உள்ளார்கள் ,

ஓவிய ஆசிரியராக பணியில் சேர்ந்தாலும் அவர் சமூக பணிகளில்  தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயலாற்றி வருபவர் , பள்ளியின் வளர்ச்சியில் மாணவர்களின் தேர்ச்சியடைவதற்கு என்ன முன்னெடுப்ப செய்ய வேண்டுமோ அனைத்தும் செய்து வருகிறார்.சீருடை சரியான முறையில் தைய்த்து வராத நிலையில் தையல் காரரை பள்ளிக்கு வரவழைத்து சரியான முறையில் அளவெடுத்து தைத்து கொடுத்தும் சரியான முறையில் முடித்திருத்தம் செய்யாத மாணவர்களை கண்டறிந்து முடித்திருத்துபவரை பள்ளிக்கே அழைத்து வந்து போலிஸ் கட்டிங் வெட்டி மாணவர்களை சீராக்கி யுள்ளார் , 

திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளியில் மாற்று பணியில் ஒருவருட காலத்தில் பொது தேர்வு எழுதும் மாணவர்களை தினம் காலை 8.15 மணிக்கு பள்ளிக்கு வரவழைத்து மாலையில் பாட ஆசிரியர்கள் கொடுக்கும் வினாக்களுக்கு காலையில் பயிற்சித் தேர்வு நடத்தி வருகிறார்.காலை பயிற்சி தேர்விற்கு வரும் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்க எனது ஊதியத்தில் இருந்தும் தொண்டுள்ளம் கொண்டவர்களிடமும் நிதி பெற்று வழங்கி வருகிறார். 

மேலும் அரசு மேல்நிலைப்பள்ளி கடம்பத்தூர் மாணவ மாணவிகளுக்கு மாலை சிறப்பு வகுப்பில் கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் எனது முயற்சியால் ஊர் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து நிதிப் பெற்று சுண்டல் , பால் , கேக் சமோசா போன்ற சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறார்.

பள்ளி கட்டமைப்பு வசதியை மேம்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழக அரைத்து கிராம பெரியோர்களை அனுகி பெரிய அளவில் நுழைவு வாயில் அமைத்து தந்துள்ளார்.நுழைவு வாயில் இருப்பக்கமும் மாணவ மாணவிகள் சென்று வர சிறிய அளவிலான நுழைவு வாயிலை தனது சொந்த செலவில் அமைத்து கொடுத்துள்ளார்.

பள்ளி வளாகம் முழுவதும் சுற்றுச் சுவர் அமைக்கப்படாமல் இருந்தது சமூக விரோதிகள் உள்ளே நுழைய வாய்ப்பு இருந்தது இதனை அப்போதைய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். ஆ.கிருஷ்ணசாமி அவர்களை அனுகி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.5 லட்சம் செலவில் பாதி அளவு அமைத்து கொடுத்தார் ,இருந்த போதிலும் சமூக விரோதிகள் தொடர்ந்து உள்ளே நுழைவது தொடர்கதையாக இருந்த்து சட்டமன்ற உறுப்பினர். வி.ஜி.ராஜேந்திரன் அவர்களை அனுகி தனது முயற்சியால் சட்டமன்ற உறுப்பினர். மேம்பாட்டு நிதி சுமார் ரூ 5 லட்சம் செலவில் முக்கால் பகுதி வரை சுற்று சுவர் எழுப்ப முடிக்கப்பட்டது , தொடர்ந்து பாதுகாப்பற்ற நிலையையே நீடித்தது மீண்டும் சட்டமன்ற உறுப்பினர். வி.ஜி.ராஜேந்திரன் அவர்களை அனுகி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி சுமார் ரூ. 5 லட்சம் பெற்று பள்ளி வளாகம் முழுவதும் சுற்றுச் சுவர் எழுப்பி பாதுகாக்கப்பட்டது.

அதோடு தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாக சுமார்ட் அறைகளை மேம்படுத்தினேன் மற்றும் கழிவரை அமைத்து தந்துள்ளார்.மாணவர் ஒழிங்கினமாக வருவதை கண்டறிந்து காதில் கம்மல் ,தோடு,இருக்கும்  கையில் வளையம் கழுத்தில் செயின் போன்றவற்றை பள்ளிக்கு அணிந்து வருவதை தடுத்து் ஒரே சீரான ஒழுக்கத்தை கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகிறார்.

மாணவ, மாணவிகள் பிறந்த நாள் என்றால் புத்தகம் அல்லது இனிப்பு வழங்கி கொண்டாட ரூ.100 வழங்கி வருகிறார். நோட்டு புத்தகம் தேவைப்படும் மாணவர்களுக்கும் என்னால் முடிந்தவரை உதவிகள் செய்து வருகிறார்.மேலும் மாணவர்கள் வளர்ச்சி பெற என்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த சேவையை 2025ஆம் ஆண்டிற்கான  பாராட்டு தமிழ்நாடு அரசின் டாக்டர். ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலை அரங்கத்தில் நடைப்பெற்றது இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியரும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர். சா.அருணன் அவர்களுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். வெள்ளி பதக்கம் அணிவித்தார். விழாவில் அமைச்சர்கள். மா.சுப்பிரமணியன்,  சேகர்பாபு, சென்னை மேயர். பிரியா,  முதன்மை செயலாளர். சந்திரமோகன், இயக்குனர்கள். கண்ணப்பன் , நரேஷ், குப்புசாமி , ராமேஷ்வர முருகன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!