ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளி மாநிலத்திலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட 571 கிலோ எடையுள்ள ரூ ,5.71.000 மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி வந்த 2எதிரிகள் கைது வாகனம் பறிமுதல்!


ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் சட்ட விரோதமாக குட்கா / புகையிலைப் போன்ற போதை பொருட்களை விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .அதன்படி பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறு கரும்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் காவல் ஆலிநர்கள் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது பெங்களூரில் இருந்து சென்னையை நோக்கி அதி வேகமாக வந்த தமிழ்நாடு பதிவு கொண்ட ஈச்சர் வாகனத்தை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது .இதனை அடுத்து வாகனத்துடன் சேர்த்து புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது . கடத்தலில் ஈடுபட்ட எதிரிகள் 1, முகமது காசிம் (43)  2, சென்னை கிஷான் (24) பெங்களூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 37 பைகள் கொண்ட swagath cool Lip , Hans ,vimal  ஆகிய 571 kg எடையுள்ள புகையிலைப் பொருட்களின் மொத்த மதிப்பு  ரூ ,5 ,71,000  / ஆகும். இந்த சிறப்பான நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டியுள்ளார். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்துபவர்கள் அல்லது பதுக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர்கள் எச்சரித்துள்ளார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!