மூர்த்தியார் நினைவு தினம் முன்னிட்டு புரட்சி பாரதம் கட்சி சார்பில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கல்!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் காலஞ்சென்ற புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனத் தலைவர் பூவை மூர்த்தியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது  23ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புரட்சி பாரதம் கட்சி நகர செயலாளர் அருண் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்

நகர இளைஞரணி செயலாளர் பிரவீன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் செல்லா மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்வந்த்  அண்ணா திமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநில துணை செயலாளர் ஷியாம் குமார் அரக்கோணம் நகர துணை செயலாளர் காமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பூவை மூர்த்தியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து திரளான பொதுமக்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் அன்னதானம் வழங்கினர். புரட்சி பா ரதம் கட்சி துணைச் செயலாளர் அஜித், பொருளாளர் ராஜி மற்றும் நிவாஸ், ஜெகன், விக்கி உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!