நவராத்திரியின் 5ஆம் நாள் வைஷ்ணவி தேவியாக வழிபாடு!
நவராத்திரியின் முதல் நாளாக சைலபுத்திரி தேவியாக, நவராத்திரியின் இரண்டாம் நாள் சிவனை நோக்கி தவம் இருந்த கன்னியான பிரம்மச்சாரிண்யை, தேவி சிவபெருமானை மணந்து கொண்டு பிரம்மச்சாரிண்யை சுமங்கலியாக சந்திரகண்டா தேவியாக அண்ட முட்டையை உருவாக்கி கர்ப்பிணியான கூஸ்மாண்ட தேவியாக வழிபாடு செய்த துர்க்கையை இன்று தாயான ரூபத்தில் வழிபாடு செய்வோம், ஐந்தாம் நாள் துர்கா தேவியை கந்தனின் தாயாக ஸ்கந்த தேவியாக வழிபடுவோம். பெண்மையின் அனைத்து அம்சங்களையும் போற்றுவதுதான் நவராத்திரி திருவிழாவின் முக்கிய நோக்கமாகும். மகாலட்சுமியின் வடிவமான வைஷ்ணவி தேவியை வழிபாடு செய்வோம்.சூரபத்மனை அளிப்பதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர் தான் முருகப்பெருமான். பார்வதி தேவி தன் சக்தி , ஆற்றல், அனைத்தையும் ஒன்றாக திரட்டி அதை வேலாக மாற்றி அந்த சக்தி வேலை தான் முருகப்பெருமானுக்கு வழங்கினார்கள். அதைக் கொண்டு தான் அரக்கர்களை சூரசம்காரம் செய்தார் முருகப்பெருமான். இவ்வாறு அரக்கர்களை அழிக்க மூல காரணமாக இருந்த ஸ்கந்த மாதாவை வழிபட்டோம் என்றால் எதிரிகளின் அச்சமில்லாமல் நல்வாழ்வு வாழ முடியும்.நவராத்திரியின் ஐந்தாம் நாளுக்கான கலர் - பச்சை, துர்க்கை அம்பிகை -ஸ்கந்தமாதா, மலர் - செம்பருத்தி ,சிகப்பு நிறமலர்,
நைவேத்தியம் -தயிர் சாதம்,
அம்பிகையின் வடிவம் மோகினி (வைஷ்ணவி )
கோலம் - பறவை வகை கோலம்
மலர் மனோரஞ்சிதம் / பாரிஜாதம்,
இலை -திருநீற்றுப்பச்சை இலை.
சுண்டல் - கடலைப்பருப்பு சுண்டல்.
பழம் - மாதுளை
ராகம் -பந்துவராளி!
நவராத்திரியின் 5ம் நாளில் அம்பிகையை வழிபடுவதால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களை நீக்கி , துயரங்களை களைந்து நாம் என்ன வேண்டும் என கேட்கிறோமோ கேட்கக்கூடிய அந்த வரத்தை தந்து அருளக் கூடியவள். பொருள் விரயத்தையும் தடுக்க கூடியவள் இந்த வைஷ்ணவி தேவி!
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக