ஓய்வு பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் நெமிலி வட்ட கிளை 2வது மாநாடு!!

இராணிபேட்டை மாவட்டம்,தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் நெமிலி வட்ட கிளை இரண்டாவது மாநாடு. 20.09.2025, சனிக்கிழமை இன்று பனப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நெமிலி வட்டகிளை தலைவர். ஆ.வேதையா  தலைமை தாங்கினார். வட்ட கிளை செயலாளர். பா. உத்தமன் வரவேற்றார். . மாநாட்டினை மாவட்ட தலைவர். நல்லாசிரியர். 

மு.சண்முகம், மாவட்ட செயலாளர். அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர். கே.ஆறுமுகம் மாவட்ட துணை தலைவர் முனைவர் .அ.கலைநேசன், மாவட்ட இணை செயலாளர். சி.மதியழகன் ஆகியோர் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தனர். 

மாநில செயற்குழு உறுப்பினர். ஜி.பாண்டுரங்கன் சங்க செயல்பாடுகளை விளக்கி பேசினார். வாலாஜா கிளை பொறுப்பாளர்கள். ஆர். முனிரத்தினம், நாகராஜன், அரக்கோணம்  கிளை தலைவர். ஜெயச்சந்திரன், உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர் . வட்டக் கிளை உறுப்பினர்கள் 40 பேர் பங்கேற்றனர் கூட்டத்தில் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து விவாதம் நடந்தது. 

இறுதியாக  இரண்டு ஆண்டுகளுக்கான *பொறுப்பாளர்களாக கீழ்கண்டவர்கள் நியமனம்* செய்யப்பட்டனர்: நெமிலி வட்டக்கிளை தலைவராக ஆ.வேதையா, செயலாளராக பா.உத்தமன், பொருளாளராக கோ.மெய்யன்பன் மற்றும் துணைத் தலைவராக கோ.ஹரிகரன், இணை செயலாளராக ஜெ.தனஞ்செயன், மாவட்ட குழு உறுப்பினர்களாக சி.ஜெயராமன், ஏ.அஜித் குமார், புண்ணியகோட்டி, வையாபுரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிறைவாக பொருளாளர். மெய்யன்பன் நன்றி கூறினார். *தீர்மானங்கள்*: 70 வயது முடிந்தவுடன் 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டம் அமுலாக்க வேண்டும். கம்யூடேசன் 12 மாதமாக குறைக்கவேண்டும்.மருத்துவ செலவு அரசே ஏற்க வேண்டும். ரயில் கட்டண சலுகை மீண்டும் அமுலாக்க வேண்டும்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!