219 ஆசிரியர்களுக்கு விருதுகள் லயன்ஸ் சங்கம் சார்பில் அரக்கோணத்தில் வழங்கப்பட்டது!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் to திருத்தணி சாலையில்  மங்கலம் திருமண மண்டபத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மற்றும் அரக்கோணம் சந்திப்பு லையன்ஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆசிரியர் தின விழாவிற்கு ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட தலைவருமான ஜி. விஸ்வநாதன் தலைமையேற்று பேசினார்.  முன்னாள் மாவட்ட ஆளுநர் கே. அருண்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட ஆளுநர்.  பாஸ்கரன், மாவட்ட முதல் துணை ஆளுநர். பூர்ண சந்திரன், மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர். ரவி,  முன்னாள் மாவட்ட ஆளுநர். சுரேஷ் மாவட்ட ஆலோசகர் ஹரிதாஸ் மற்றும் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் தனியார் பள்ளிகள் இயக்குனர் முனைவர் பெ. குப்புசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 219 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டி பேசினார். ஆசிரியர் தின விழா  ஒருங்கிணைப்பாளர். சிவசக்தி,  கோபால் மற்றும் மாவட்ட அவை செயலாளர், மாவட்ட பொறுப்பாளர்கள், மண்டல தலைவர், வட்டாரத் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் திரளாக பங்கேற்றனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!