குடியாத்தத்தில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 15 பேர் கைது கார் உள்ளிட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்11 பேர் தலைமறைவு

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர். ருக்மாங்கதன் மற்றும் போலீசார் நேற்று குடியாத்தில் இருந்து பெரும்பாடி செல்லும் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது 10கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி அமர்ந்தனர் இருந்தனர்.

 இதில் சந்தேகம் அடைந்த போலீஸ்சார் அவர்களை பிடிக்க சென்றனர் இதனை அறிந்த இளைஞர்கள்  சிலர் தப்பி ஓடினார். பின்னர் போலீசார் அங்கிருந்த 4 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர் அப்போது அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை மாத்திரை மற்றும் ஊசிகளை வாங்கி பயன்படுத்தி மற்றும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்த காரை பறிமுதல் செய்தனர்

மேலும் விசாரணையில் குடியாத்தம் அடுத்த எர்த்தங்கள் கிராமத்தை சேர்ந்த மணி மகன் ஐயப்பன் 27 ரமேஷ் மகன் நவீன் குமார் 20 குமார் மகன் தேவன் 25 முல்லை நகர் பகுதியில் சேர்ந்த வெங்கடேசன் மகன் மோகன் 23 என தெரிய வந்தது மேலும் இவர்களிடம் இருந்து 40 மாத்திரை அட்டைகள் மற்றும் 5  சிரஞ்சு ஊசிகள் ஆகியவை பறிமுதல் செய்தனர் மேலும் இது குறித்து போலீசார்  26 பேர் மீது வழக்கு பதிந்து அதில் 15 பேரை கைது செய்துள்ளனர் மேலும் தலைமறைவாக உள்ள 12 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் விசாரணையில் விக் கோட்டா பகுதியில் போதை மாத்திரைகளை வாங்கி வந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் போதை மாத்திரை விற்பனை செய்த விக்கோட்டா பகுதியை சேர்ந்த ராஜா மகன் பாஸ்கரன் 22 ரமேஷ் மகன் ராதாகிருஷ்ணன் 41 ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

குடியாத்தம் செய்தியாளர் கே. வி. ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!