வானூர்: கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா!!

விழுப்புரம் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். இரா.இலட்சுமணன் அவர்கள் விழுப்புரம் மத்திய மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதி, கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம், கோண்டூர் ஊராட்சியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, வாக்குச்சாவடி எண்:252-பகுதி குடும்பங்களுடன் தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.  இந்நிகழ்வில்  மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர். இரா.கண்ணப்பன், ஒன்றிய செயலாளர். செல்வமணி, ஒன்றிய துணை செயலாளர். குமணன், துணைத்தலைவர். ஆனந்தராஜ், மாவட்ட பிரதிநிதிகள் ராமமூர்த்தி, பிரகாசம், சுரேஷ், அவைத்தலைவர். மோகன்தாஸ், ஊராட்சிமன்ற தலைவர். ஏழுமலை, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர். தொல்காப்பியன், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர். திருவிக்ரமன், ஒன்றிய கவுன்சிலர். விஜயலட்சுமி, செல்வமணி, முருகுஇளங்கோவன், கிளைசெயலாளர். ஏழுமலை, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மருதுபாண்டி, அருண்பிரசாத் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!