பண்ருட்டியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா!!
கடலூர்மாவட்டம்,பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு பண்ருட்டி நகர திமுக சார்பில் நேற்று15.9.2025 காலை 9 மணி அளவில் கும்பகோணம் சாலை நகர கழக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நான்கு முனை சந்திப்பில் உள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் நகரக் கழக செயலாளர். க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் கடலூர் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மண் மொழி மானம் காக்க தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்கின்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்டத் துணை செயலாளர்கள். தணிகை செல்வம், ஆனந்தி சரவணன் நகர அவை தலைவர். ராஜா நகர பொருளாளர். ராமலிங்கம் நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன் மாவட்ட பிரதிநிதி. பிரபு நகர துணை செயலாளர்கள். சீனிவாசன், சசிகுமார் மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர். பரணி சந்தர் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர். ராம்குமார் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர். சங்கர் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். லோகநாதன் நகர தொழிலாளர்கள் அணி அமைப்பாளர். ஜாகிர் உசேன் நகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். தமிழ்ச்செல்வன் நகர இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் நகர மாணவர் அணி அமைப்பாளர். பார்த்திபன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உட்கிளை செயலாளர்கள் வட்ட பிரதிநிதிகள் வழக்கறிஞர் அணி இளைஞரணி மாணவரணி மற்றும் கழகத்தின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கழகத் தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக