அரக்கோணம் குடிசை வாழ் மக்களுக்கு வீடுகட்ட பணியாணை வழங்க சு. ரவி MLA கோரிக்கை!!

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் எம்.எல்.ஏவுமான சு. ரவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2015ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அர்பன் திட்டத்தின் கீழ் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாநில பங்களிப்பு செய்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் இதுவரை இந்த திட்டத்தை ராணிப் பேட்டை மாவட்டத்தில் செயல்படுத்தவில்லை. இதனால் குடிசையில் வாழ்ந்து கொண்டிருக் கின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரிதும்

பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு அரக் கோணம் சுற்றுவட்டார கிராமங்களில் குடிசையில் வாழும் 600 குடும்பங்கள் வீடு கேட்டு மத்திய அர சின் இணையதளத்தில் பதிவு செய்தனர். அதில் 250 பேர் தகுதி உள்ளவர் களாக விசாரணை முடித்து 6 மாதமாகியும் இதுவரை பணி உத்தரவு வழங்க வில்லை.

அரக்கோணம், நெமிலி தாலுகாக்கள் சென்னை பெருநகர குழும எல்லைக் குள் வந்து 5 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் எந்த பலனும் இல்லை. ஆயிரக் கணக்கான ஏழை, எளிய மக்கள் குடிசையிலே வாழ்ந்து வருகின்றனர். அரக்கோணம், நெமிலி தாலுகாக்களில் இதுவரை விண்ணப்பம் செய்துள்ள 600 பேருக்கும் உடனடி யாக வீடு கட்டுவதற்கு பணியாணை உத்தரவை வழங்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருவதாக 2 ஆயிரம்  நபர்களிடம் இருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களின் நிலை குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!