கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்! ஜெயக்குமார் IPS பங்கேற்பு!!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் கடலூர் மாவட்ட காவல்துறையில் கடந்த ஜீலை மாதம் மெச்சதகுந்த பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர்கள். E. பாலகிருஷ்ணன், P.N. ராஜா, காவல் ஆய்வாளர்கள். அம்பேத்கார், நந்தகுமார், லட்சுமி, கவிதா, சிவப்பிரகாசம், ஜெர்மின்லதா, P. கவிதா, உதவி ஆய்வாளர்கள். தங்கவேல், பொன்மகரம், தமிழ்ச்செல்வன், உத்தராம்பாள், சந்துரு, அழகிரி, செந்தில்குமார், சுரேஷ்முருகன், தவச்செல்வம், பரணிதரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 80 காவல்துறையினருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்IPS அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக