பண்ருட்டி அருகே புது பிள்ளையார் குப்பம் திருட்டு வழக்கு தொடர்பாக நேரில் சென்று ஆய்வு செய்த ஜெயக்குமார் IPS !!

கடலூர் மாவட்டம், காடாம்புலியூர் காவல் நிலைய சரகம் புதுபிள்ளையார்குப்பம் டாக்டர். ராஜா வயது 44, என்பவரது வீட்டில் கடந்த 25ம் தேதி காலை அவரது மாடி வீட்டின் கதவு உடைத்து வீட்டின் பீரோவில் வைத்திருந்த 95 பவுன் நகைகள் திருடு போனது இது சம்பந்தமாக காடாம்புலியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  IPS அவர்கள் நேரடியாக சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டார். காவல்துறை மோப்ப நாய்கள் கைவிரல் ரேகை பிரிவு நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டனர். 

பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா  தலைமையில் காடாம்புலியூர்  நந்தகுமார், உதவி ஆய்வாளர்கள் தங்கவேல். வேல்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு மற்றும் போலீசார் நேற்று காலை பண்ருட்டி -கும்பகோணம் சாலை சாத்திப்பட்டு அருகே வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தபோது சந்தேகத்தின்பேரில் TN04 AR 0794 இனோவா காரை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டபோது தப்பியோட முயன்றவர்களை மடக்கி பிடித்து, விசாரணையில்  வேலூர் தெள்ளுர் பொன்னியம்மன் கோவில் தெரு.  சுரேஷ் ( 37 ), மேட்டூர் தொட்டிபட்டு யூனியன் பள்ளி தெரு தினேஷ்குமார் ( 30 ),மேட்டூர் செட்டியூர்ஜெகதீசன் (31),

தர்மபுரி எஸ்.பி.ஆபீஸ் பின்புறம்முருகர் கோவில் தெருமுருகன் (52) , வேலூர் தெள்ளுர் மாரியம்மன் கோவில் தெருஅசோக் (33)என்பதும் மேலும் காரின் உள்ளே சோதனை செய்ததில் உருக்கிய நிலையில் சுமார் 93 பவுன் எடையுடைய நகையை பதுக்கி வைத்திருந்ததை கைப்பற்றியும், விசாரணை மேற்கொண்டதில் சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 நபர்கள் சம்பவ நாளன்று புதுபிள்ளையார்குப்பம் கிராமத்துக்கு இனோவா காரில் வந்து பூட்டியிருந்த வீட்டை உடைத்து மேற்படி நகைகளை களவாடி சென்றதாகவும், களவாடப்பட்ட நகையை உருக்கி பல இடங்களில் விற்பனை செய்ய முடியாததால் கும்பகோணம் சென்று விற்பனை செய்யலாம் என வந்தபோது போலீசாரிடம் மாட்டிக் கொண்டதாக கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!