சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜெயக்குமார் IPS அவர்கள் ரேகிங் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் மாணவ மாணவிகளுக்கு ரேகிங் எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பங்கேற்று பேசுகையில் உங்களுக்கு ஏதேனும் அசௌகரியங்கள் கல்லூரி படிக்கின்ற சீனியர் மாணவர்களால் ஏற்படுமேயானால், கேலி, கிண்டல் செய்வதால் மாணவர்களை பாதிக்குமேயானால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு கேலிவதை தடுப்பு சட்டம் 1997 வழிவகை செய்கிறது. சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்கள் போதைப் பொருள் பழக்கத்தை கற்றுக் கொள்ளாமல் நல்ல முறையில் படித்து பட்டத்தை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் எனவும்,மாணவர்கள் ஒழுக்கத்துடன் சேர்ந்த கல்வி மிகவும் அவசியமாக இருக்க வேண்டும் என சிறப்புரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பல்கலைக்கழக பதிவாளர். பிரகாஷ் , மாணிக்கவாசகம், அறிவுடை நம்பி, துணை காவல் கண்காணிப்பாளர். T.A.J லாமேக்காவல்ஆய்வாளர்.அம்பேத்கார்ஆகியோர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக