கடலூர்:மாரடைப்பால் உயிரிழந்த காவலர் இளஞ்சேரன் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிதி உதவி வழங்கிய ஜெயக்குமார்IPS!!

கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக 2002 ம் ஆண்டு பணியில் சேர்ந்து கடலூர் மாவட்டம் மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில்பணியாற்றி வந்த தலைமை காவலர் இளஞ்சேரன் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 09.03.2025 அன்று இறந்துவிட்டார். கடலூர் மாவட்டம் காவல்துறை காவல்

அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாட்ஸ்அப் குரூப் மூலம் ஒருங்கிணைத்து இறந்துபோன இளஞ்சேரன் குடும்பத்திற்கு உதவி செய்யும்  பொருட்டு  ரூபாய்.1 லட்சம் நிதி திரட்டப்பட்டது. அதனை மாவட்ட கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் இறந்து போன இளஞ்சேரன் குடும்பத்தாரிடம் ரூபாய் 1 லட்சம் காசோலை வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். கோடீஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள். மனிஷா, சார்லஸ், அப்பாண்டைராஜ், காவல்துறை வாட்ஸ்அப் குரூப் நண்பர்கள் சுந்தரம், ராமச்சந்திரன், மகேந்திரன், இளங்கோவன், முரளி, அறிவரசு, பாபு,செந்தில்குமார், அருண், ராஜாதுரை, ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!