கணவரை இழந்த பெண் காவலர்கள் குடும்பத்திற்கு ஜெயக்குமார் IPS தலைமையில் நிதி உதவி!!
கடலூர் மாவட்டம், ஆயுதப்படை பெண் காவலர் திருமதி. ஜெயப்பிரியா கணவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆயுதப்படையில் பணியாற்றும் சகபெண் காவலர்கள் ஒன்றிணைந்து 55,800 ரூபாய் திரட்டப்பட்ட நிதியில் ரூபாய் 15,800 பெண் காவலர் ஜெயப்பிரியா அவர்களின் குழந்தையின் கல்வி செலவுக்கு பயன்பெறும் வகையில் செல்வமகள் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டது. ஆயுதப்படை பெண் காவலர் திருமதி. தினேகா கணவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆயுதப் படையில் பணியாற்றும் பெண் காவலர்கள் ஒன்றிணைந்து 31,600 ரூபாய் திரட்டப்பட்ட நிதியில் ரூபாய் 21,600 தினேகா அவர்களின் குழந்தையின் கல்வி செலவுக்கு பயன்பெறும் வகையில் செல்வமகள் திட்டத்தில் செலுத்தப்பட்டது. பெண் காவலர்கள் மூலம் திரட்டப்பட்ட நிதியுடன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் தனது சொந்த பணம் தலா ரூபாய் 10,000 வீதம் மொத்தம் ரூபாய் 20,000 பணம் கணவனை இழந்த பெண் காவலர்களின் குடும்பத்தாருக்கு பயன் தரும் வகையில் பணத்தை வழங்கி உதவி மேற்கொண்டார். நிதி உதவி பெற்றுக் கொண்ட பெண் காவலர்கள் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் சகபெண் காவலர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக