கடலூரில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாம்! ஜெயக்குமார் IPS பங்கேற்பு!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கடலூர் (வ) மாவட்டம் கோண்டூர் கிளை மற்றும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை(GH) இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் இன்று ஆகஸ்ட் 10 தேதி காலை 10.00 மணி அளவில் கோண்டூர் TNTJ மர்கஸில் மாவட்ட தலைவர் முகம்மது யாசின் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்டகாவல்கண்காணிப்பாளர்.S.ஜெயகுமார் IPS அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். கடலூர் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர். வினோத் மருத்துவ அதிகாரி மற்றும் K.கதிரவன் DS, A சந்தோஷ் குமார் இரத்த கவுன்சிலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இரத்த கொடையாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தகுதியானவர்கள் 50 யூனிட்கள் இரத்தத்தை தானமாக வழங்கினார்கள்.
இதில் TNTJ கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள். மாவட்ட தலைவர். முகமது யாஸின், மாவட்ட செயலாளர். அப்துல் வஹாப், மாவட்ட பொருளாளர். அப்துல் காதர், மாவட்ட துணைத் தலைவர். யாசர் அரஃபாத், மாவட்ட துணைச் செயலாளர். உபைதுல்லாஹ், மருத்துவர் அணி செயலாளர். ஷர்புதீன், தொண்டர் அணி செயலாளர் ஜப்ருதீன், மாணவர் அணி இல்யாஸ், மற்றும் கோண்டூர் கிளை நிர்வாகிகள், கிளை தலைவர் முஜிபுர் ரஹ்மான், செயலாளர் அப்துல் சலாம், துணைத் தலைவர் பக்கிரி முகமது, துணைச் செயலாளர் முகமது ரஃபி, மற்றும் உறுப்பினர்கள், அரசு தலைமை மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்



கருத்துகள்
கருத்துரையிடுக