கடலூர்: தனது பயிற்சி அனுபவத்தையும் வெற்றி பெற்ற அனுபவத்தையும் மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடிய சரண்யா IAS!!


கடலூர் மாவட்டம்,செழுமை மிக்க செம்மண் பூமியில் இருந்து செங்கோட்டை நோக்கி நம் மண்ணின் பெருமையை புகழ் சேர்க்க, கடலூர் மாவட்டம், பத்திரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த S.சரண்யா அவர்கள் UPSC தேர்வில் இந்திய அளவில் 125 இடத்தைப்பிடித்து IAS தேர்வாகி உள்ளார். 

அவர் கொள்ளுக்காரன்குட்டையில் அமைந்துள்ள வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்து, பள்ளி மாணவர்களிடையே தனது பயிற்சி அனுபவத்தையும், வெற்றி பெற்ற அனுபவத்தையும் மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடினார். 

பலதரப்பட்ட விடயங்கள் பற்றி பேசி மாணவர்களுக்கு அரசு பணி குறித்தும், அரசு தேர்வுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். இது பள்ளி மாணவர்களுக்கு உந்து சக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை. 

முன்னதாக பள்ளியின் தாளாளர் அவர்களும், டைரக்டர் குழுவினர்களும்,  UPSC தேர்வில் வெற்றி பெற்ற S.சரண்யா அவர்களுக்கு வரவேற்பு அளித்து  மரியாதை சேர்க்கும் விதமாக பாராட்டினர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!