அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டிக்கு தேர்வான பெண் காவலர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்த ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி 2025, செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் 25.7.2025, 26.7.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. வடக்கு மண்டலம் பெண்கள் அணியின் சார்பாக கடலூர் மாவட்டம் , நெய்வேலி நகர காவல் நிலைய பெண் தலைமை காவலர். ராஜேஸ்வரி அவர்கள் பிஸ்டல் பிரிவில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர். விஜயலட்சுமி 200 கஜம் பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இருவரும் அகில இந்திய துப்பாக்கி குண்டு சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். மேலும் தமிழ்நாடு அளவில் ஒட்டுமொத்த பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து கேடயம் பெற்றுள்ளனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பதக்கம் மற்றும் அகில இந்திய துப்பாக்கி குண்டு சுடும் போட்டிக்கு தேர்வான காவலர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!