ரெட்டிவலம் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் ! பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஒன்றிய குழு தலைவர். பெ. வடிவேலு!!
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிவலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “உங்களுடன் ஸ்டாலின்”திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர். சிவக்குமார் தலைமை தாங்கினார், ரெட்டிவலம் ஊராட்சி மன்ற தலைவர். உமாதேவி ரமேஷ், நெடும்புலி ஊராட்சி மன்ற தலைவர். மாறன், அகவலம் ஊராட்சி மன்ற தலைவர். ஆஷா மார்கண்டேயன், வேட்டாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர். சாந்தி இரவி, ஒன்றிய குழு உறுப்பினர். கிருஷ்ணவேணி, ஆரூண், வட்டாட்சியர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் ரெட்டிவலம், வேட்டாங்குளம், அகவலம், நெடும்புலி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள், நெமிலி திமுக ஒன்றிய செயலாளர்கள், ஆர். பி.ரவீந்திரன், எஸ். ஜி. சி. பெருமாள், மணிவண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் நரசிம்மன், தனசேகர், வெங்கடேசன், சீனிவாசன், பிரகாஷ், ரமேஷ், செந்தில் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.






கருத்துகள்
கருத்துரையிடுக