வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்! பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஒன்றிய குழு தலைவர். பெ. வடிவேலு!!

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர், சிவக்குமார் தலைமை தாங்கினார்.நெமிலி வட்டாட்சியர், ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நெமிலி ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு, மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் முகாமில், உதவி மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மனுக்கள் பூர்த்தி செய்து வழங்கப்பட்டது.

இதில் நெமிலி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர். ரவீந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் பிரகாஷ், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தணிகாசலம், கிருஷ்ணமூர்த்தி, சசிகலா, வளர்மதி, பரணி குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் முரளி, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் வெளிதாங்கிபுரம்,காட்டுப்பாக்கம்,மேல்களத்தூர், மகேந்திரவாடி, கோடம்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், மின்சார துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!