முகாம் மனுக்கள் விநியோகத்தில் குளறுபடி வட மாம்பாக்கம் மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், வடமாம்பாக்கம் ஊராட்சி கிராம மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் அரக்கோணம்கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர். பாக்யராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர். பிரசாந்த் முன்னிலை வகித்தார். முகாமில் அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர். நிர்மலா சௌந்தர் கலந்து கொண்டார். இவர். | பொது மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அரக்கோணம் திமுக ,

ஒன்றிய செயலாளர் பசுபதி பொருளாளர் டில்லி பாபு மற்றும் ஜான் அன்பழகன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் ரூபாய். 1000 உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் கேட்டு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது அதே நேரத்தில் முகாம்  மனுக்கள் சரியானபடி விநோ கம் செய்யாமல் இருந்தாகவும் மனுக்கள் கேட்டு   அதிகாரிகளை முற்றுகையிட்டனர். ஒரு கட்டத்தில் சாலை மறியல் செய்யவும் முடிவு எடுத்திருந்தனர் அப்பொழுது ஒன்றிய செயலாளர் பசுபதி தகவலறிந்து மக்களை சமாதானப்படுத்தி அனைவருக்கும் மனுக்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார் அதன்பின் பொதுமக்களுக்குஅன்னதானங்களையும் ஒன்றிய செயலாளரே. வழங்கினார். இதுபோல் கிருஷ்ணா பாலிடெக்னிக்  என். எஸ். எஸ். மாணவர்கள் பொது மக்களுக்கு முகாம் இட்டு உதவினர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!