தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் அ. சிவா நன்றியினையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார். அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது.
உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வு ஒன்றே இருந்த இன்றைய நிலையில் தொடர்ந்து 10,11,12 என மூன்று பொதுத் தேர்வுகளை எதிர் நோக்கம் மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பு, மன நலம், உடல் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகி இடை நிற்றல் அதிகரிக்கவும் அனைவரும் மேல்நிலை கல்வி பயில முடியாத சூழலும் ஏற்பட்டு விடுகிறது. இந்த சூழ்நிலையில் மாணவ மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு 11 ம் வகுப்பிற்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வை ரத்து செய்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கும், மாண்புமிகு தமிழக துணை முதல்வருக்கும் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் தமிழக அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் அப்போது செயலாளர். கலைசெல்வன் பொருளாளர். பழனிவேல் துணை தலைவர். கோமதிகணேசன் துணை செயலாளர். மணிமேகலை ஆகியோர் உடனிருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக