. வடிவேலு தலைமையில் நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் நடைபெற்ற ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!!
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், ஒன்றிய கழக, கிளைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நெமிலி பேருந்து நிலையம் அருகில் உள்ள, கே.பி.ஜே திருமண மண்டபத்தில், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு, பொதுக்குழு உறுப்பினர். அப்துல் நசீர் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், பாண்டியன், முகமது அப்துல் ரகுமான், அரிகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் நெமிலி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அதிகப்படியான வாக்குகள் பெறுவது குறித்தும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பான திட்டங்களான, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், தாயுமானவர் திட்டம், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன் போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வருவதை மக்களிடம் எடுத்துக் கூறி, கழகத்திற்கு வலு சேர்க்கும் விதமாக கழக நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கிராமப்புறங்களில் ஒவ்வொரு கிளைக்கழகத்திற்கும் ஒரு இளைஞரணி அமைப்பாளர், 3 இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பிற்கினங்க, நெமிலி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 49 கிளைக் கழகங்களிலும் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் கழக வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி ஒன்றிய கழக செயலாளர்.பெ. வடிவேலு அவர்கள் பேசினார்.மேலும் இக்கூட்டத்தில், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர். ஸ்ரீதரன், அரக்கோணம் தொகுதி வழக்கறிஞர் அணி பொறுப்பாளர். ராமமூர்த்தி, ரமேஷ், தாண்டவன், சுரேஷ் ஆகிய வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில், மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள்,(BLA2), BDA, BLC, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியின் இறுதியாக, ஒன்றிய துணை செயலாளர் முகம்மது அப்துல் ரகுமான் நன்றி கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.



கருத்துகள்
கருத்துரையிடுக