வேலூரில், தெரு மின் விளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிமுக மாமன்ற உறுப்பினர் தரையில் உருண்டு அங்கப்பிரதேசன போராட்டம்!!!

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலூர் மாநகராட்சி, மண்டலம் 4, 49வது வார்டு தொரப்பாடி பகுதியில் தெரு மின்விளக்கு வசதி, சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, சுத்தமான நிரந்தர குடிநீர் வசதிகள் ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் அடிப்படை வசதிகளை செய்து தராததால் அப்பகுதி வார்டு கவுன்சிலர் மாமன்ற உறுப்பினர் எஸ்.லோகநாதன் 49 வது வார்டு பொதுமக்கள் சமூக ஆர்வலர்களுடன் மாமன்ற உறுப்பினர் தரையில் உருண்டு மக்களுக்காக சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்து தரக்கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இது குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எஸ். லோகநாதன் என்பவர் அதிமுக கவுன்சிலர் என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி திமுக மேயர் அவரை கண்டுகொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். அப்பகுதியில் பள்ளிகளும் மருத்துவமனைகளும் வழிபாட்டு தலங்களும் உள்ளதால் பொதுமக்கள்  சாலையில் செல்லக்கூட   முடியவில்லை இதனால்  அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக  ஆர்வலர்கள் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!