சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில்  கடலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வுவழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர். சு.திருமாவளவன் அவர்கள் தலைமை தாங்கிதலைமைஉரையாற்றினார்.தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர். ராஜா .ஆ வரவேற்புரையும், நோக்க உரையும் ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர். வீ.லோகநாதன் முதுகலை ஆசிரியர்கள். குமார்,  லட்சுமிகாந்தன்.பாரதி,


பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள். ஹேமலதா , மாலதி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அலைபேசி பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் அலைபேசியில் உள்ள செயலிகளினால் எவ்வாறு நம்முடைய தகவல்கள் தேடப்படுகிறது.நம்முடைய புகைப்படங்கள் மற்றும் வங்கி கணக்கில் உள்ள படங்கள் எவ்வாறு அலைபேசி செயலிகளால் களவாடப்படுகிறது என்பது குறித்து விளக்கமாக காவல் ஆய்வாளர். பி. கவிதா அவர்கள் எடுத்து கூறினார்.காவலர்கள் ராஜ மன்னன் மற்றும் விபின் ராஜ் ஆகியோர் கூடுதலாக அலைபேசிகளால் ஏற்படும் தீங்குகள் குறித்து எடுத்து கூறினர்.சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளியின் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சியின் நிறைவாக கலைய ஆசிரியர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!