பண்ருட்டி: பக்கிரிப் பாளையம் பகுதியில் மின்விளக்குகள் மற்றும் கல்வெட்டுகள் அமைப்பதற்கான இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 10 வது வார்டு பக்கிரிப்பாளையம் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் மின்விளக்குகள் மற்றும் கல்வெட்டுகள் அமைத்து தர வேண்டி பண்ருட்டி நகர மன்ற தலைவர் அவர்களிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் இன்று 23.8.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் நகர அவைத் தலைவர். ராஜா நகர மன்ற உறுப்பினர். கிருஷ்ணராஜ் வட்ட பிரதிநிதி பிரபு மற்றும் வார்டு பொதுமக்கள் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக