அரக்கோணம்:ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் கொண்டுவர வேண்டும் விசிக வலியுறுத்தி பேச்சு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் அரக்கோணம் விசிக நகர ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி கவின் ஆணவ படுகொலை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர். அப்பள்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள். கவுன்சிலர். நரேஷ், பாக்யராஜ் மற்றும் சந்துரு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட செயலாளர். கவுதம் மற்றும் இளஞ்சிறுத்தைகள் பேரவை மாநில துணை பொது செயலாளர். வழக்கறிஞர். தமிழ் மாறன் சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் பேசியவர்கள் ஆணவ படுகொலை எதிரான சட்டம் கொண்டு வர வேண்டும் கவின் குடும்பத்தாருக்கு ரூபாய் இரண்டு கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் அவரது சகோதரருக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்தி பேசினார்கள். கூட்டத்தில் கோவி. பார்த்திபன், திருச்சி ஜேம்ஸ், அருண், குணா, ஜெகதீசன்,  வஜ்ரவேல், ஜெயராஜ், சாம்ராஜ் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!