நெமிலியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டிய அமைச்சர். ஆர். காந்தி!!

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி; கரியாக்குடல் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இந்த வளாகத்தில் வட்டார கல்வி அலு வலகம், வேளாண்மை அலுவலகம், புள்ளியியல் அலுவல கம், செயற் பொறியாளர் அலுவலகம் உள்ளிட்டவைகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்ட நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வந்தது. இதனை தொடர்ந்து;விஜயபுரம் பகுதியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்காக 5 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு நெமிலி ஒன்றிய பெருந்தலைவர்.பெ. வடிவேல் தலைமை வகித்தார். கலெக்டர். சந்திரகலா IAS சோளிங்கர் MLA முனிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார்.ராஜலட்சுமிவரவேற்றார்.சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்.ஆர். காந்தி அவர்கள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

இதில் பிடிஒ சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள்.SGC. பெருமாள்,R.P. ரவிந்திரன், மணிவண்ணன், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர். பவானி வடிவேலு, பேரூராட்சி தலைவர். ரேணுகா தேவி சரவணன், செயல் அலுவலர். எழிலரசி, நகர செய லாளர். ஜனார்த்தனன், வர்த்தக அணி அமைப்பாளர். ராகேஷ் ஜெயின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!