டிஜிட்டல் நூலகமாகும் வாய்ப்பு அரக்கோணம் எம்.எல்.ஏவுக்கு வாசகர் கூட்டத்தில் பாராட்டு!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் முழு நேர நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பாக நூலகர் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வாசக வட்ட தலைவர். செந்தில்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களை வாசகர் வட்ட செயலாளரும் இரண்டாம் நிலை நூலகருமான எ.பழனி வரவேற்றார்
வாசகர் வட்ட அமைப்பாளர். எஸ்.வந்த்ராவ் மற்றும் ஆலோசகர் மோகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசியவர்கள் அரக்கோணம் நகரில் 36 வார்டுகள் உள்ளன ஐந்து அல்லது ஆறு வார்டுகள் உள்ளடக்கிய நூலகம் ஒன்றை நகராட்சி நிர்வாகம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மற்றொருவர் பேசிய போது அரக்கோணம் நூலகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லவும் டிஜிட்டல் நூலகமாக தாம் உயர்த்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த சட்டமன்ற உறுப்பினர் சு.ரவிக்கு நன்றியும் பாராட்டு தெரிவிப்பதாக பேசினர் கூட்டத்தில் வாசக வட்ட துணைத்தலைவர்கள் தர்மன் ஆர் என் குணா செந்தில் ஸ்டாலின் பேராசிரியர் வீரமணி வழக்கறிஞர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மூத்த நூலகர் மரகதவல்லி நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக