பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை தேமுதிக கூட்டத்தில் பிரேமலதா பேச்சு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தேமுதிக பொதுச் செயலாளர். பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உள்ளம் தேடி.இல்லம் நாடி என்னும் பெயரில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 9 மணிக்கு வந்தார். அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசிய தாவது: 40 ஆண்டுகளாக விஜயகாந்த் பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வந்தார். அவர் மறைந்தும் நம்மோடு இன்றுவரை வாழ்ந்து வருகின்றார்.
அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து நாம் செல்ல வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு பாது காப்பு இல்லை. எங்குபார்த்தாலும் கஞ்சா பெருகி விட்டது. டாஸ்மாக் விற் பனை அதிகரித்து விட்டது. விலைவாசியும் உயர்ந்து விட்டது. வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக வெற்றி பெறுவதற்கு தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் பேசினார். இந்த நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மற்றும் நகர கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக