கடலூரில் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி!!

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 11.8.2025 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.N. கோட்டீஸ்வரன் அவர்கள் தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிராக போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கும் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன் என உறுதிமொழி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். V. ரகுபதி, துணை காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி)  சரவணகுமார், காவல் ஆய்வாளர். குருமூர்த்தி, அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!