குழந்தைகள் அறிவியல் மாநாடு_மற்றும் ஆசிரியர்கள் பயிற்சி முகாம்!!


ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  குழுவின் சார்பில் *குழந்தைகள் அறிவியல் மாநாடு_ வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி முகாம், அரக்கோணம் தூய அந்திரேயர் மேல்நிலைப்பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் மு.தருமன் தலைமை தாங்கினார்  அரக்கோணம் ஒன்றியத் தலைவர்  நா.வேல்குமார்,  கருத்தாளர்.வே. பத்மநாபன், சோளிங்கர் ஒன்றிய செயலாளர்.சு. விசுவநாதன், அரக்கோணம் ஒன்றிய துணைத் தலைவர் து.லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அறிவொளி ஏ.முத்துகிருஷ்ணன் வரவேற்று பேசி  நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.   அறிவியல் உத்திகளை எடுத்துச் சொல்லி முகாமினை  பள்ளி தலைமை ஆசிரியர்  .சுரேஷ் செல்வகுமார்

தொடங்கி வைத்தார். நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்னும் தலைப்பில் மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு   வழிகாட்டி ஆசிரியர்கள் ஆற்காடு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் டாக்டர். கே.வி.கிருபானந்தம் மற்றும் சோளிங்கர் மீரா கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர். மு. கோபாலகிருஷ்ணன் இருவரும் நவீன தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி  மிக சிறப்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில், மாவட்டத் தலைவர் பேராசிரியர். அ.கலைநேசன் பங்கேற்று, மாணவர்களை அறிவியல் மனப்பான்மையுடன்  ஆற்றவேண்டிய சமூகக் கடமையை விளக்கி நிறைவு செய்தார். மாவட்ட இணை செயலாளர்  இரா.ஆலிஸ்மேரி நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!