விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு!!




விழுப்புரம் மாவட்ட காவல்துறை தமிழ்நாடு அரசின் அறிவுறுத்துதலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ப.சரவணன்IPS அவர்கள் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி  எடுக்கப்பட்டது. 


'உறுதிமொழி'போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன் நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன் போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதை பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல் வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன். 

என போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 


விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!