செம்பேடு ஊராட்சி பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்!!

இராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், செம்பேடு ஊராட்சி குருராஜப்பேட்டை அரசு பெண்கள் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திமுக ஒன்றிய செயலாளரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான தமிழ்மணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர். சௌந்தர் முன்னிலை வகித்தார்.

 சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் ஒன்றிய குழு பெருந்தலைவர். நிர்மலா கலந்து கொண்டார். இவர்பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்டார் பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் வழங்கபட்ட நல உதவிகளை கிராம மக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர். ராமலிங்கம்  மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், வருவாய்த் துறையினர், இதர அரசு துறையினர் கலந்து கொண்டனர். இம் முகாமில் அதிக அளவில் ஆயிரம் ரூபாய் கோரும் மனுக்கள் குவிந்தன.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!