கடலூர் தலைமை தபால் நிலையத்தில் சைபர் கிரைம் சம்பந்தமாக நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரம்!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்படி கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் அவர்கள் சைபர் கிரைம் காவலர்களுடன் கடலூர் தலைமை தபால் நிலையத்தில் சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது,  OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும் காவல் உதவி App தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட்,Loan Apps, school scholarship scams ,Part time jobs பற்றி சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும்  சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in  குறித்து விளக்கமளிக்கபட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  மண்டல தபால் அலுவலர். நிர்மலாதேவி மற்றும் கடலூர் உட்கோட்ட தபால் கண்காணிப்பாளர். கலைவாணி மற்றும் கடலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர். கோ. ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!