போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சு.திருமாவளவன் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார். உதவி தலைமை ஆசிரியர்கள் திருமதி. B.ஹேமலதா திருமதி. மாலதி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் திரு ஏ.வீ.லோகநாதன்

ஆசிரியர்கள் திரு.குமார்,திருமதி. பாரதி, திருமதி. பரிமளா திரு. குணசெல்வம் ஆசிரியர் செயலர் திரு. ரத்ன பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞரும்,பட்டியல் வழக்கறிஞருமான திரு.வைத்தீஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும், போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் எடுத்து கூறினார் .பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பரமேஸ்வர பத்மநாபன் அவர்கள் மாணவர்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வும் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வும் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் திரு முரளி அவர்கள் மாணவர்களுக்கு சிறந்த முறையில் நன்னெறிகளை எடுத்து கூறினார்.நிகழ்ச்சியை நிறைவாக பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ராஜா நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் பெற்றோர்களும் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.நிகழ்ச்சியில் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சியும்,போதை பொருள் விழிப்புணர்வு உறுதி மொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!