கடலூர்: பணி நியமன ஆணைக்காக மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற அப்துல் சமது!!
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சியில் தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைசெய்து வந்த அப்துல் சமது நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்வில் தமிழ்நாடு அளவில்1.50 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வில் மாநிலத்தில் 2500 பேர் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றனர் இதில் கடலூர் மாவட்ட அளவில் ஒரே ஒரு நபராக இவர் மட்டுமே வெற்றி பெற்று உதவி பொறியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை கழிவுநீர் மற்றும் குடிநீர் வாரியத்தில் உதவி பொறியாளராக நியமிக்கப்பட்டு தமிழக முதல்வரால் பணி நியமன ஆணை பெற்றார். அதனைத் தொடர்ந்து தனது பணிநியமன ஆணைக்காக மாவட்ட ஆட்சியர். சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.
உடன் நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணராஜன் உடனிருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக